‘பிக் பாஸ் 4’ நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!

  • July 6, 2021 / 11:23 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘அம்புலி’. அதன் பிறகு சனம் ஷெட்டியின் கால்ஷீட் டைரியில் ‘கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, வால்டர்’ என படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

கடந்த ‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் – சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், சனம் ஷெட்டிக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

College Student Arrested For Sending Vulgar Message To Sanam Shetty1

இப்போது, சனம் ஷெட்டி நடிப்பில் ‘மஹா, எதிர் வினையாற்று’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை சனம் ஷெட்டி தனக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வண்ணமுள்ளார் என்று கூறி அந்த நபர் மீது அடையாறு சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்திருந்தார். தற்போது, சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் என்றும், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus