பார்க்கில் கவர்ச்சி காஸ்டியூமில் உடற்பயிற்சி… ‘கோமாளி’ நடிகையை தாக்கிய கும்பல்!

  • September 5, 2020 / 01:42 PM IST

கன்னட திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிரிக் பார்ட்டி’. இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இது தான் இவர் அறிமுகமான முதல் கன்னட படமாம். இதனைத் தொடர்ந்து ‘காலேஜ் குமார்’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார் சம்யுக்தா ஹெக்டே.

அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வாட்ச்மேன்’, ‘ஜெயம்’ ரவியின் ‘கோமாளி’, வருணின் ‘பப்பி’ போன்ற படங்களில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் பெங்களூரில் உள்ள ஒரு பார்க்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது, இவர்கள் அணிந்திருக்கும் கவர்ச்சியான காஸ்டியூம் தொடர்பாக அங்கு வந்த கும்பல் கேள்வி கேட்டுள்ளனர். பின், அந்த கும்பல் சம்யுக்தா மற்றும் அவரது நண்பர்களை அடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus