“பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தின் மூலம் தமிழ்திரைப்படவுலகிற்கு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் அஸ்வின். இவருக்கு வரும் 24ம் தேதி சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்திலேயே திருமணம் நடக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
“கும்கி” படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் அஸ்வின். இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகனாவார்.
இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன், தொடரி, மொட்ட சிவா கெட்ட சிவா, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இவருக்கும் சென்னை கே.கே நகரை சேர்ந்த வித்யாஸ்ரீ என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர் அமெரிக்காவில் எம்எஸ் பட்டம் பெற்றவர். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு நிச்சயம் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 24ம் தேதி இவர்களின் திருமணம் சூளைமேட்டில் உள்ள அஸ்வினின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது.