பிரபலங்கள் பலரும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். பிரபலங்கள் போஸ்ட் செய்யும் பல ட்வீட்கள் உடனக்குடன் மக்களை சேர்ந்து விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவேலு ட்விட்டரில் இணைந்த நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும் ட்விட்டரில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் ஆரம்பித்த ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தான் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளதாகவும், கூடிய விரைவில் பல படங்களில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மக்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டதால், ட்விட்டரில் கணக்கை தொடங்கியுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் விசாரித்து பார்த்ததில் செந்தில் எந்த ட்விட்டர் கணக்கையும் தொடங்கவில்லை என்றும் யாரோ செந்திலின் பெயரில் போலியாக கணக்கு தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.