“ட்விட்டரில் என்னுடைய பெயரில் போலி அக்கவுண்ட்”… காவல் ஆணையரிடம் புகார் அளித்த நடிகர் செந்தில்!

காமெடி என்று சொன்னாலே செந்தில் – கவுண்டமணி ஆகிய இருவரின் பெயர்கள் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர்களின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் செந்தில் – கவுண்டமணி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இப்போது காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் ஃபேமஸான சுரேஷ் சங்கையா இயக்கி வருகிறார். இதனை ‘சூப்பர் டாக்கீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சமீர் பரத் ராம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 14-ஆம் தேதி) நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கொடுத்த புகாரில் “என்னுடைய பெயரில் ஒரு நபர் போலியான ட்விட்டர் அக்கவுண்டை கிரியேட் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். போலியான ட்விட்டர் அக்கவுண்டை கிரியேட் செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share.