அழுது கொண்டே கடிதம் எழுதும் போட்டியாளர்கள்… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!
November 9, 2020 / 01:51 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க் பற்றி ரியோ ராஜ் “கும்பிடு குருசாமியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த பண்டிகையை நீங்கள் இந்த பிக் பாஸ் குடும்பத்தோடு மட்டுமில்லாம ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக இந்த வீட்ல கொண்டாடப்போறீங்க. அப்படி இந்த பண்டிகையை நீங்க சேர்ந்து கொண்டாட நினைக்கும் ஒரு நபருக்கு கடிதம் எழுத உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.