நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .
இந்நிலையில் வாரிசு படம் தெலுங்கு திரை உலகில் வெளியிட முன்னுரிமை அளிக்கப்படாது என்று கூறப்பட்டு சர்ச்சை ஆனது . அதன் பிறகு தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் . இந்நிலையில் விஜய் படங்கள் வெளியாகும் போது சர்ச்சையாவது வாடிக்கையாக உள்ளது . அந்த வகையில் விஜய் படங்கள் சந்தித்த தொகுப்பை பார்க்கலாம் .
1. புதிய கீதை
நடிகர் விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு முதலில் கீதை என்று பெயர் வைக்கப்பட்டது ஆனால் இந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ” புதிய கீதை ” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது .
2. 2011 -ஆம் ஆண்டு வெளியான காவலன் படம் வெளியாகும் போது ” சுறா ” படத்திற்கான நஷ்ட ஈடு தொகையை விஜய் கொடுத்தால் காவலன் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது . அதன் பிறகு விஜய் அந்த நஷ்ட ஈடு தொகை கொடுத்த பின்பு தான் காவலன் படம் வெளியானது .
3. 2012 -ஆம் வெளியான துப்பாக்கி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறி கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் வழக்கு தொடர்ந்தனர் .
4. 2013 -ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மர்ம கடிதம் வந்ததாகக் கூறி அரசு தலைவா படத்திற்கு தடை விதித்தது . பின்பு டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் 11 நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது .
5. 2014 -ஆம் ஆண்டு ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்த கத்தி படத்தை வெளியிடக்கூடாது என சில தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
6.2015 -ஆம் ஆண்டு விஜய் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் முதல் நாள் அதிரடி சோதனை நடத்தியதால் ‘ புலி ‘ படத்தின் அதிகாலை காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு தாமதமாக திரையிடப்பட்டது .
7.2016-ஆம் ஆண்டு மினிமம் கேரண்டி முறையில் தெறி படத்தை வாங்கக் கூறி வற்புறுத்தப்பட்டதாலும் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது .
8.2017 ஆம் -ஆண்டு மெர்சல் படம் வெளியாவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் கொடுப்படாமல் இருந்தது . விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகியவைக்கு ப.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு .
9. 2018 -ஆம் ஆண்டு சர்கார் படத்தின் கதை தன்னுடைய கதையின் தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு பதிவு செய்தார் .
10. 2019 -ஆண்டு பீகில் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டது . அந்த காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர் .
11. 2021 -ஆம் ஆண்டு மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் நடைபெற்று வந்தபோது விஜய்யின் வீடு , அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது .
12 . 2022 -ஆம் ஆண்டு பீஸ்ட் ஏப்ரல் 14 -ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தின் காரணமாக ஏப்ரல் 13 -ஆம் தேதி வெளியானது .
13 . வாரிசு படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது . ஆந்திரா , தெலுங்கானாவில் இந்த படத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என்று எதிர்ப்பு கிளம்பி நீங்கியது .