சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருந்தார்.
ஜுபின் இசையமைத்திருந்த இதற்கு ஃபரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார், தேவராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘GM ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மற்றும் ‘7G ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. தற்போது, நடிகை தர்ஷா குப்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். பிகினி உடை அணிந்து தர்ஷா குப்தா நீச்சல் குளத்தில் குளித்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
Wake up, live your life and sing the melody of your soul
pic.twitter.com/0sEJo8MbhA
—
Dharsha
(@DharshaGupta) November 20, 2021