ஜார்ஜியாவில் ‘விஜய் 65’ ஷூட்டிங்… முக்கிய ரோலில் நடிக்கிறாரா ‘குக் வித் கோமாளி’ பிரபலம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் இந்த படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான பவித்ரா லக்ஷ்மி முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது தொடர்பாக நடிகை பவித்ரா லக்ஷ்மி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நீங்க சொல்லி தான் நான் இந்த நியூஸையே கேள்விப்படுறேன். நீங்க சொன்ன மாதிரி அது நடந்துச்சுன்னா, உங்களுக்கு நான் தனியா ட்ரீட் வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.