‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • May 26, 2023 / 12:39 PM IST

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே தனக்கு இருந்த தனி திறமையால் கவனம் ஈர்த்தவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ (சீசன் 7) நிகழ்ச்சி மூலம் ஃபேமஸானார். அதன் பிறகு ‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பாடல் பாடி அசத்தி வந்த ஷிவாங்கிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை ஷிவாங்கி சரியாக பயன்படுத்திக் கொண்டதால், மீண்டும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 2-விலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஷிவாங்கிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

சமீபத்தில், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார் ஷிவாங்கி. இவர் கடந்த ஆண்டு (2022) வெளியான சிவகார்த்திகேயனின் ‘டான்’ மற்றும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்நிலையில், நேற்று (மே 25-ஆம் தேதி) ஷிவாங்கியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus