கூல் சுரேஷிற்கு அபிஷேகம் செய்த சிம்பு ரசிகர்கள் !

  • September 15, 2022 / 10:40 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்தார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்து இருந்தது .

படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடந்து முடிந்தது. படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் தீவிரமான ரசிகர் கூல் சுரேஷ் எந்த படம் திரைக்கு வந்தாலும் திரையரங்கிற்கு வந்து விமர்சனம் செய்வார் .அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு வந்த அவருக்கு சிம்பு ரசிகர்கள் அபிஷேகம் செய்து உள்ளனர் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

இதை பார்த்த மக்கள் இதெல்லாம் தேவையா என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus