கூல் சுரேஷிற்கு பரிசளித்த தயாரிப்பாளர் !!

  • September 28, 2022 / 12:17 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருந்தார் .

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்து இருந்தது .

 

இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது . மேலும் சமீபத்தில் படத்தின் வெற்றி விழாவும் கொண்டப்பட்டது . அதில் தயரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புக்கு ஒரு காரும் , இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுக்கு ஒரு இரண்டு சக்கர வண்டியும் பரிசளித்தார் . இந்நிலையில் நடிகர் சிம்புவின் தீவிரமான ரசிகர் மற்றும் நடிகர் கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை விளம்படுத்திய காரணத்திற்காக அவரது புது மாடல் ஐ போன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus