ரஜினி சென்மென்ட்டிமென்ட் ஒர்க்கௌட் ஆகுமா ?

  • November 23, 2022 / 10:25 PM IST

பசங்க, களவானி, வாகை சூடவா , மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விமல். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, “சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள்.

நடித்த படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும் போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும் என்று கூறினார் .

நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus