சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ் மொழியில் இசையமைத்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடையது தான். அது தான் ‘தமிழன்’. இயக்குநர் மஜீத் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு டி.இமானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து அசத்தினார். குறிப்பாக சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் டி.இமானின் பாடல்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது.
தற்போது, இசையமைப்பாளர் டி.இமான் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “இந்த ஜென்மத்துல மீண்டும் நான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்.
அதுக்கு காரணம் அவர் எனக்கு பண்ண மிகப் பெரிய துரோகம் தான். அதை பற்றி நான் விரிவாக வெளியே சொல்ல முடியாது. ஒரு வேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.