அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு 2020-ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிப்பு!
January 2, 2021 / 12:01 PM IST
|Follow Us
இந்தியத் திரையுலகின் உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்பட்டு வருகிறது. தற்போது, 2020-ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெறுவோரின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த படத்துக்கான விருது ‘டு லெட்’ படத்துக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. செழியன் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கிய இந்த படத்தில் முக்கிய ரோலில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், தருண் ஆகியோர் நடித்திருந்தனர்.
சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் முக்கிய ரோலில் மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம் ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கு ‘ராட்சசி’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது.
கெளதம் ராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் முக்கிய ரோலில் ஹரீஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த இயக்குநருக்கான விருது பார்த்திபனுக்கு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை இயக்கியதற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கு என்றும், சிறந்த பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருது ‘தல’ அஜித்துக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.