தனுஷ் மற்றும் ஜிவி.பிரகாஷ் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படம்!

  • November 3, 2020 / 10:00 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்து ‘D43’ திரைப் படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தனுஷின் D43 திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் மாளவிகா மோகனன் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்காக தன் உடலை தயார் படுத்தி வரும் தனுஷுடன் ஜிவி பிரகாஷ் குமாரும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஜிம்மில் இருப்பது போன்ற புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியான அசுரன் மற்றும் ஆடுகளம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட்.

இவர்கள் இணைந்து அடுத்து வரும் திரைப்படத்தின் பாடல்களுக்காக இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus