நடிகர் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஜோடி விரைவில்!
September 4, 2020 / 01:00 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது தனுஷ் ராட்சசன் இயக்குனரான ராம்குமார் மற்றும் கார்த்திக் நரேனுடன் 2 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று செய்தி வெளியானது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே ராம்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு அவர் டேட் கொடுத்திருந்தாலும் இன்னும் அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகாத நிலையில் கார்த்திக் நரேனின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் தனுஷ். மேலும் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளாராம். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு இவருக்கு 40 இலட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
சமீபத்தில் தனுஷ் பிறந்தநாளன்று மாளவிகா மோகனன் அவருடன் நடிக்க விருப்பம் தெரிவித்து ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.