2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.
இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவர் தற்போது நடிகர் தனுஷுடன் மீண்டும் கூட்டணி சேர உள்ளதாகவும் அந்த படத்திற்கான கதையை தயார் செய்து முடித்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளும் இவர் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தனுஷ் தனது 43வது படத்திற்கு கார்த்திக் நரேன் தான் இயக்குனர் என்று கூறியிருப்பதால் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி சிறிது காலம் கழித்து நடைபெறும் என்று தெரிகிறது. தற்போது தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் “கர்ணன்” திரைப்படமும் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.