மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜியை பற்றி சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உருக்கம்!
September 11, 2020 / 04:33 PM IST
|Follow Us
பிரபல தொலைக்காட்சி நடிகர் மற்றும் காமெடியனான வடிவேலு பாலாஜி மாரடைப்பால் திடீரென நேற்று காலமானார். 45 வயதான இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காமெடி நடிகரான வடிவேலு பாலாஜி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது மாரடைப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மேல் அங்கு சிகிச்சை எடுத்து வந்தும் எந்த பலனும் இன்றி சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கடைசியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது திடீர் மரணம் இவருடன் பணிபுரிந்தவர்கள் மட்டுமல்லாது சினிமா துறையை சேர்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அவர்களும் தங்கள் இரங்கலை தற்போது தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் இவருடன் பல ஆண்டுகள் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேலு பாலாஜியுடன் தனக்கு இருக்கும் நட்பு குறித்தும் அவரது திடீர் மரணம் தனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி குறித்தும் என்றுமே அவரது சிரிப்பை மறக்கவே முடியாது என்றும் மிகவும் சோகமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வடிவேலு பாலாஜியின் குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல பிரபல நடிகர் தனுஷ் வடிவேலு பாலாஜியின் திடீர் மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி ரோபோ ஷங்கர், விவேக் பிரசன்னா, சாந்தனு, சதீஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி ரகுராம், ரம்யா பாண்டியன் போன்ற பிரபல சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
Deeply saddened and disturbed by the sudden demise of a great talent, Vadivel Balaji. May his soul rest in peace. My condolences to his family.
Vadivelu Balaji is no more and just reading that shakes me and makes me feel numb . Thank you my friend for all the fun,teasing,laughter and the countless times when you lifted my spirit up not having a clue how much it helped me . Can’t believe I am deleting your number. RIP 💔 pic.twitter.com/ylGyniKPaJ