கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “எனை நோக்கி பாயும் தோட்டா” என்ற படத்தின் இசையமைப்பாளர் தர்புக சிவா தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “முதல் நீ முடிவும் நீ” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்து தற்போது அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அமித் இயக்கத்தில் வெளியான “ராஜதந்திரம்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தர்புக சிவா. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான “கிடாரி” என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இசையமைத்தார். நடிகராக இருந்து இசையமைப்பாளராக தன் திறமையை நிரூபித்த தர்புக சிவா தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
தற்போது “முதல் நீ முடிவும் நீ” எனும் படத்தை இவர் புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புக சிவா இந்த படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டரில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கதையை கொண்டுள்ளதாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிகிறது.
இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தற்போது தர்புக சிவா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளதாகவும் இந்த பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
I’m really happy to share this with you. First single from our film MNMN will be out tomorrow at 4pm!#MudhalNeeMudivumNee #MNMNFirstSingle @MNMN_TheFilm @SonyMusicSouth @supertalkies @sidsriram @Kavithamarai pic.twitter.com/AnTORiuo5e
— Darbuka Siva (@DarbukaSiva) September 1, 2020
It’s inspiring to share the wonderful words of the brilliant Thamarai which adds so much life and soul to this song. #MNMNFirstSingle#MudhalNeeMudivumNee@darbukasiva @supertalkies @SonyMusicSouth @sujithsarang @sreejithsarang @sidsriram pic.twitter.com/5ciugC3g3p
— Darbuka Siva (@DarbukaSiva) September 1, 2020
Here is a small sound snippet of what is to come tomorrow. Hope you enjoy it. https://t.co/5QdkxYCsuX
— Darbuka Siva (@DarbukaSiva) September 1, 2020