ஷாருக்கானின் ‘பதான்’-க்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • February 13, 2023 / 10:50 AM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பதான்’ படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்துள்ளாராம். இதனை ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த படம் உலக அளவில் ரூ.888 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில், இதில் நடிப்பதற்காக நடிகை தீபிகா படுகோன் ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus