தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமானதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கை வருகிற ஜூலை மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ண குமார், மகேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் – பாப்புலர் மலையாள எழுத்தாளர்கள் ஷர்ஃபு – சுஹாஸ் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர்.
The Final schedule of @dhanushkraja‘s #D43 shoot resumes from July, 2021 💥@karthicknaren_M @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek @thondankani @smruthi_venkat @KK_actoroffl @Actor_Mahendran @DoneChannel1 pic.twitter.com/3fFXkxKqua
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) June 25, 2021