தனுஷ் – மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கும் ‘D43’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

  • July 27, 2021 / 01:13 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ண குமார், மகேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் – பாப்புலர் மலையாள எழுத்தாளர்கள் ஷர்ஃபு – சுஹாஸ் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (ஜூலை 28-ஆம் தேதி) காலை 11 மணிக்கு தனுஷின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus