துள்ளுவதோ இளமை டூ D40 வரை… தனுஷின் 18 ஆண்டு பயணம்..!

  • May 8, 2020 / 03:38 PM IST

தனுஷ் சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் நிறைவடைவதை ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் தவிர ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்த்துள்ளார் தனுஷ். அவரது படங்களை மெய்சிலிரித்து பார்க்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

தனுஷ் நடித்த முதல் படம் துள்ளுவதோ இளமை மே 10, 2002இல் திரைக்கு வந்தது. இன்னும் நான்கு நாட்களில் இது 18 வருடங்களை நிறைவு செய்கிறது. தனுஷ் கெரியரில் இந்த மைல்கல்லை ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர்.

Dhanush Achieved many things in the Short Journey2

ட்விட்டரில் தனுஷ் பற்றி ரசிகர்கள் அதிகம் பதிவிட்டு வருகின்றனர். 18 வருடங்கள் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக ஒரு ஸ்பெஷல் வீடியோவையும் அவர்கள் வெளியிடவுள்ளனர். நடிகர் பிரசன்னா அதை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தனுஷ் 18 வருடங்கள் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக ட்விட்டர் ட்ரெண்ட் செய்யவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். 17 வருடம் நிறைவு பெற்றதை சென்ற வருடம் கொண்டாடிய போது 1 லட்சத்திற்கும் அதிகமாக ட்விட்கள் பதிவானது.

இந்த வருடம் 7 லட்சம் ட்விட்களை பதிவிட திட்டமிட்டு வருகின்றனர்.தனுஷ் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் பாலிவுட் படம் அத்ராகி ரே ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்களில் பணிகள் அனைத்தும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.கொரோனா நிலைமை சீரான பிறகு தான் ஜகமே தந்திரம் ரிலீஸ் என்று சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus