முரளிக்கு பதிலாக நடித்த தனுஷ்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 5, 2022 / 12:26 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் வெற்றி மாறன், சேகர் கம்முலா படங்கள் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காதல் கொண்டேன்’. இந்த படத்தில் ஹீரோயினாக சோனியா அகர்வால் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார். இதில் தனுஷ் ‘வினோத்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நாகேஷ், சுதீப், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் செல்வராகவனின் முதல் சாய்ஸாக இருந்தது முரளி தானாம். பின், சில காரணங்களால் முரளியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus