தனுஷ் – கார்த்திக் நரேன் காம்போ… குட் நியூஸ் சொன்ன தயாரிப்பு நிறுவனம்!

  • January 8, 2021 / 04:32 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 8-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதன் ஷூட்டிங்கை 50 நாட்களில் ஒரே ஷெடியூலாக முடிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் நடிக்க உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

1

2

3

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus