சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் தனுஷ்… டைட்டிலை முடிவு செய்த ‘ராட்சசன்’ இயக்குநர்!
October 29, 2020 / 09:00 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ‘சன் பிக்சர்ஸ்’-க்கு ஒரு படம் பண்ண ஒப்புக் கொண்டார் தனுஷ். இந்த படத்தை மித்ரன்.ஆர்.ஜவஹர் தான் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் – சூப்பர் ஹிட்டான ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம் குமார் கைகோர்க்கும் படத்தின் டைட்டில் தொடர்பான ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு ‘வால் நட்சத்திரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படம் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகப்போவது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.