தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்துக்கான படப்பிடிப்பு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்ஸ் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு ஹீரோயினாக தமன்னா ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம்.