யுவன் ஷங்கர் ராஜாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட தனுஷ் – STR… வைரலாகும் வீடியோஸ்!

  • August 31, 2021 / 02:38 PM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

இப்போது தமிழில் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, சிலம்பரசனின் ‘மாநாடு’, தனுஷின் ‘ராயன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, நேற்று இரவு இவரின் பர்த்டே கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus