மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ் !

  • February 27, 2023 / 11:18 AM IST

தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலாவுடன் ஒரு பன்மொழிப் படத்தில் கைகோர்க்கப் போவதாக அறிவித்துள்ளார், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீண்ட நாட்களுக்கு முன் வெளியானது. ஆனால் தனுஷின் முன் கமிட்மென்ட் காரணமாக படம் தொடங்கவில்லை. தற்போது, தனுஷின் சேகர் கம்முலா படம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

நடிகர் தனுஷ் இந்த ஏப்ரல் முதல் படப்பிடிப்பிற்கு தேதிகளை ஒதுக்கியுள்ளார். இயக்குனர் தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கியுள்ளார், மேலும் இந்த படம் நடிகர்கள் மற்றும் குழுவினரின் அதிகாரப்பூர்வ பட்டியலுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus