நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 2002-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார் . இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் . இவரது ஆரம்ப காலகட்டத்தில் இவரை பலர் விமிர்சித்தார்கள் . அவர் ஒல்லியாக இருப்பதை பலர் கிண்டலடித்தனர் .ஆனால் நடிகர் தனுஷ் தனது நடிப்பின் மூலம் அவர்களுக்கு பதில் அளிக்க தொடங்கினார். பொல்லாதவன் , திருவிளையாடல் ஆரம்பம் , யாரடி நீ மோகினி , ஆடுகளம் , என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் . தமிழ் சினிமா மட்டுமில்லமல் , பாலிவுட் சினிமாவிலும் இவர் படங்களுக்கு வரவேற்பு இருந்தது . மேலும் பாடகர் , பாடலாசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என்று தன்னை மெருகேத்திக்கொண்டே இருக்கிறார் . இந்நிலையில் நேற்றைய தினத்தோட தனுஷ் சினிமாவிற்கு வந்து 20 வருடம் ஆகிறது . இது குறித்து நடிகர் தனுஷ் தனது டிவீட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் .
அந்த அறிக்கையில் ‘ அனைவருக்கும் வணக்கம் இந்த திரையுலகில் நான் என் வாழ்க்கையை தொடங்கி இரண்டு தசாப்தங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை . நான் துள்ளுவதோ இளமை தொடங்கும் போது நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை , கடவுள் கருணை காட்டியுள்ளார் . தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது ரசிகர்களுக்கு என்னால் நன்றி என்ற சொல்லில் முடித்துவிட முடியாது . நீங்கள் எனது பலத்தின் தூண்கள் , உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்கள் தங்கள் நிபந்தனையற்ற அன்பை என் மீது பொழிந்ததற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் .
அனைத்து பத்திரிக்கை , ஊடங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . இன்று என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி . அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் ! என்னுள் இருக்கும் நடிகரை
அடையாளம் கட்டிய என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி . இறுதியாக நான் என் அம்மாவிற்கு கூறுகிறேன், அவருடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னைப் பாதுகாத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தன. அவர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை.மற்ற காரியங்களில் மும்முரமாக இருக்கும் அந்தத் தருணம் தான் வாழ்க்கை என்று எங்கோ படித்து இருக்கிறேன் . என்னால் ஒத்துக்கொள்ள முடியாது . இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம் . அதை எண்ணிப்பார்ப்போம். எண்ணம் போல் வாழ்க்கை , அன்பை பரப்புங்கள் , “ஓம் நமசிவாய ” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் .