தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் வரலாற்று கதையாம்!

  • June 10, 2020 / 08:56 PM IST

நடிகர் தனுஷ் இயக்கி முதலில் வெளிவந்த படம்’ பவர்பாண்டி ‘அதை தொடர்ந்து அவர் , நடிகர் நாகார்ஜுனா மற்றும் அதிதீ ராவ் ஹிடாரியை வைத்து தனது இரண்டாவது படத்தை (DD2) இயக்க முடிவு செய்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல தமிழ் பட நடிகரான தனுஷ் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார் . தமிழில் வெளிவந்த அசுரன் ,பட்டாசு போன்ற இவரது படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் ‘DD2’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை இந்த லாக்டவுன் முடிந்ததும் தொடங்க எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படம் ‘நான் ருத்ரன்’ என்ற தலைப்பில் வெளியாகும், அதில் நாகர்ஜுனா மற்றும் அதிதீ ராவ் ஹிடாரி நடிப்பார்கள் என்று செய்திகள் வந்துள்ளன‌.

இந்த லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பிற்கான வேலைகளில் தனுஷ் ஈடுபடுவார் எனவும் , அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்ய தொடங்கிவிட்டார் எனவும் செய்தி வந்துள்ளது. இந்தப்படம் ஒரு வரலாற்றுக் கதையாக இருக்கும் எனவும் இதுவரை தான் நடிக்காத கதாபாத்திரமாக இருக்கும் என்றும் நடிகர் நாகர்ஜுனா இந்த படத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரித்து , தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus