‘ஜகமே தந்திரம்’ சுருளியாக மாறிய தனுஷின் ரசிகை… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தை வருகிற ஜூன் மாதம் 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ப்ளான் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் மூன்று சூப்பரான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். தற்போது, ரசிகை ஒருவர் ‘ஜகமே தந்திரம்’ தனுஷ் போல் மேக்கப் போட்டு அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Medha Srivastava (@medha.vi)

Share.