‘ஜகமே தந்திரம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும்… தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த தனுஷ் ரசிகர்கள்!
February 6, 2021 / 10:54 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக இப்படம் வருகிற மார்ச் மாதம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ப்ளான் போட்டுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ ரூ.45 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில், இது தொடர்பாக தனுஷ் ட்விட்டரில் “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்களை போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தற்போது, தனுஷின் ரசிகர்கள் பல இடங்களில் ஒட்டியிருக்கும் ஒரு போஸ்டரில் “வேண்டுகோள்!! எங்கள் அன்பு தலைவர் தனுஷ் அவர்களின் வெற்றிப்படமான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்பு தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்குகளை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.