‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘பூ’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை பார்வதி.
அதன் பிறகு ‘சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது பார்வதி நடிப்பில் இரண்டு மலையாள படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் மூக்கு குத்திக் கொண்டாராம் பார்வதி. மூக்கு குத்தும்போது எடுக்கப்பட்ட வீடியோவையும், பின் மூக்கு குத்திய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=azCYAJXR72M