சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் பல படங்களில் வில்லன் ரோலிலும், காமெடி ரோலிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘சமரசிம்ஹா ரெட்டி’ என்ற படம் தான் ஜெயபிரகாஷ் ரெட்டியின் நடிப்புக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் ஜெயபிரகாஷ் ரெட்டி ‘வீரராகவ ரெட்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ என்ற படத்தின் மூலம் என்ட்ரியானார். ‘ஆஞ்சநேயா’வுக்கு பிறகு ஜெயபிரகாஷ் ரெட்டிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் சூர்யாவின் ‘ஆறு’, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘சின்னா’, ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தின் ‘தர்மபுரி’, தனுஷின் ‘உத்தம புத்திரன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி கடைசியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8-ஆம் தேதி) நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல் கிடைத்துள்ளது.