தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் சேகர் கம்முலா இயக்கும் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது. தனுஷின் கேரியரில் 51-வது படமான இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் நாகார்ஜுனா நடிக்கிறாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இன்று (ஜனவரி 18-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வாக அறிவித்ததுடன், ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளனர்.
A blockbuster voyage that's bound to resonate with the nation! #DNS kicks off with a pooja ceremony and the shoot begins with a key schedule
More details on the way ⏳@dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @AsianSuniel @puskurrammohan @SVCLLP pic.twitter.com/bYBtyuwfGA
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) January 18, 2024