தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் சேகர் கம்முலா இயக்கும் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது. தனுஷின் கேரியரில் 51-வது படமான இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் நாகார்ஜுனா நடிக்கிறாராம். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் திருப்பதியில் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது, இந்த ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த ஷெட்யூலை மும்பையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ‘தாராவி’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.