வைரலாகும் தனுஷ் புகைப்படம் !

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் தனுஷ் . இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார் . செல்வராகவனும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் . மேலும் நடிகர் பிரபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் படங்களில் நடித்து வந்த தனுஷ் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் .இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் செல்பிஷ் படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது . இதனால் நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

Share.