தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006-ஆம் ஆண்டு ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இளம் வயதில், அவரின் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘வெயில்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தது.
அடுத்ததாக அஜித்தின் ‘கிரீடம்’, தனுஷின் ‘பொல்லாதவன்’, ரஜினிகாந்தின் ‘குசேலன்’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, விக்ரமின் ‘தெய்வத் திருமகள்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.
இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் முறையாக சர்வதேச ஆங்கில இசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ‘கோல்ட் நைட்ஸ்’ (COLD NIGHTS) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘ஹை & ட்ரை’ (HIGH & DRY)-யை நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர். தற்போது, செகண்ட் சிங்கிள் டிராக்கான ‘க்ரையிங் அவுட்’ (CRYING OUT) -ஐ இன்று (நவம்பர் 19-ஆம் தேதி) நடிகர் தனுஷ் ரிலீஸ் செய்துள்ளார்.
Wow .. simply wow … amazing vocals and the accent is perfect. Congrats gv.. best of luck .. here is #CryingOut https://t.co/3UxlfVQXht@gvprakash @JuliaGartha @oklistenin @orchtweets @gdinesh111 @venkystudios
— Dhanush (@dhanushkraja) November 19, 2020