ஜப்பான் நாட்டில் தனுஷ்க்கு கிடைத்த வரவேற்பு !

  • November 23, 2022 / 09:17 PM IST

திருச்சிற்றம்பலம் படத்தை ஆர் ஜவஹர் எழுதி இயக்கி உள்ளார் . இந்த படம் காதல் குடும்ப நாடகத் திரைப்படமாகும். படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் .படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருக்கிறார் , ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் செய்து இருந்தார் ..

.

திருச்சிற்றம்பலம் 18 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது . நடிகர் தனுஷுக்கும் படத்தின் இயக்குனர் மித்ரன் .ஆர் . ஜவகர் அவர்களுக்கும் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது .


இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ” மேகம் கருக்காதா ” என்ற பாடலுக்கு ஜப்பான் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . அந்த வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த பாட்டுக்கு செய்த ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus