கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜகமே தந்திரம்’… ரிலீஸ் தொடர்பாக தனுஷ் ட்வீட்!

  • February 2, 2021 / 07:48 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இப்படம் வருகிற மார்ச் மாதம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ப்ளான் போட்டுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ ரூ.45 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது, இது தொடர்பாக தனுஷ் ட்விட்டரில் “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்களை போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus