ரசிகரின் மகனை செல்லமாக கொஞ்சிய தனுஷ் ! வைரலாகும் வீடியோ !!

  • February 10, 2023 / 01:21 PM IST

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் .

வாத்தி படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கி உள்ளார். ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அங்கு வந்த சிறுவனை நடிகர் தனுஷ் கன்னத்தை கிள்ளி கொஞ்சுகிறார் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus