தனுஷ் – கார்த்திக் இணைந்து நடித்த ‘அனேகன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 9, 2023 / 03:49 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அனேகன்’. இந்த படத்தில் ஹீரோயினாக அமைரா தஸ்தூர் நடிக்க, பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன், முகேஷ் திவாரி, தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.55 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus