சமீபத்தில் தமிழில்’ அசுரன்’ திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் அவர்களின் நடிப்பில், ஜீவி பிரகாஷ் குமார் அவர்களின் பின்னணி இசையில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு மற்றும் பாராட்டுகளை இத்திரைப்படம் குவித்தது.
இதையடுத்து சீனாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அசுரன் திரைப்படத்தை அவர்கள் மொழியில் ரீமேக் செய்ய முன்வந்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் தனுஷ்.இந்த வாய்ப்பின் மூலம் நடிப்பின் அடுத்த உயரத்தை எட்டியுள்ளார்.
ராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் சங்கர் இயக்கத்தில் வெளியான ரோபோ 2.0 இதற்கு முன்னர் சீன மொழியில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. முதன் முதலில் சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தமிழ் படம் என்ற பெருமையை ‘அசுரன் ‘ எட்டியுள்ளது.இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஊரடங்கு முடிந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.