தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘அமேசான் ப்ரைம்’?

  • September 27, 2022 / 06:38 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளாராம். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இதில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில்,இந்த படத்துக்கான பூஜை போடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘அமேசான் ப்ரைம்’ நிறுவனம் ரூ.38 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸாகுமாம். அதன் பிறகே OTT-யில் வெளியாகுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus