தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’… ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • May 10, 2023 / 04:47 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்தனர். இந்த GLIMPSE படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூன் மாதத்திலும், டீசரை ஜூலை மாதத்திலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus