தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘கேப்டன் மில்லர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளாராம்.

இவர் ஏற்கனவே ‘ராக்கி, சாணிக் காயிதம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.