Captain Miller : தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’… தெலுங்கு வெர்ஷன் எப்போது ரிலீஸ்?

  • January 12, 2024 / 07:05 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கேப்டன் மில்லர்’ படம் இன்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனை வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus