Captain Miller : தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • January 6, 2024 / 05:28 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்களை ரிலீஸ் செய்தனர்.

இந்த டீசர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus